எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் கன்னியாகுமரி, அரூர் உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள், காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்க மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.
கடந்த 2021-ம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்று, 10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கியுள்ளது. மேலும், 12.08.2024 அன்று மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக அமைத்துருவாக்க உத்தேச முடிவினை அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல், உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது.
தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 2025, ஜன.5ம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும். பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
அரசு, இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல், திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிருவாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.