முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க அனைத்து நாடுகளுக்கும் விரும்பம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      உலகம்
Jaishankar 2023 06 08

மாட்ரிட், இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புகின்றன என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் ஸ்பெயின் நாட்டு தூதர்களின் சர்வதேச மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

ஸ்பெயின் நாட்டின் சர்வதேச தூதர்களிடையே உரையாற்ற ஒரு வெளிநாட்டு அமைச்சர் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இன்றைய உலகளாவிய சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் நல்ல நட்புறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன.

இந்தியா நேற்று 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாடு, திறன்கள் மற்றும் செயல்பாடுகளை உலகம் நாடுகள் கவனிக்கின்றன. சர்வதேச பேச்ச்வார்த்தைகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. கடினமான காலங்களில், பல்வேறு தரப்பினருடன் பேசவும், உதவவும் தயாராக இருக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது பணம் அல்லது வளங்களைப் பற்றியது அல்ல, மாறாக இதயம் மற்றும் மனதைப் பற்றியது. பாலமாக செயல்படும் திறன், சிந்தனை மற்றும் நம்பகத்தன்மையை இந்தியா கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து