எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி அதிகாலையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.
எனினும் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 14-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினர். மறுபுறம் இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.
பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல நாட்கள் போராட்டம் நீடித்தது.
பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட் வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்திருந்தது.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து கோர்ட்டின் வாசல் கதவை தட்டுவோம் என கூறியுள்ள பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், மரபணு பரிசோதனை அறிக்கையில், ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார் என குறிப்பிடப்படவில்லை. சம்பவத்தின்போது, 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால், நாங்கள் சற்று ஆறுதலாக உணர்வோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் தொடர்ந்து கோர்ட்டின் கதவை தட்டுவோம். நாட்டு மக்களின் ஆதரவையும் நாங்கள் கோருவோம் என்று கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர். நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பில், சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் இருக்கும் என்று அறிவித்தார். குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் நாளை (20-ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கோர்ட் தெரிவித்துள்ளது.
அப்போது, “நான் இதைச் செய்யவில்லை. இதைச் செய்தவர்கள், ஏன் கைது செய்யப்படவில்லை?” என்று சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறினார். அக்டோபர் 7, 2024 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தியது. விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சி.பி.ஐ. ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
இன்றைய ராசிபலன்
13 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்
- திருவாரூர் தியாகராஜர் வீதி உலா.
-
இன்றைய நாள் எப்படி?
13 Mar 2026


