முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு முகேஷ் அம்பானிக்கு அழைப்பு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      உலகம்
Trump 2024-11-06

Source: provided

அமெரிக்கா: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற 20-ம் தேதி டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி யேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், இந்தியாவில் பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அம்பானி, அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதவியேற்பு விழாவுக்கு முன் டிரம்ப் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜே.டி.வான்ஸ் ஆகியோர் அளிக்கும் இரவு விருந்திலும் அம்பானி தம்பதி கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கின்றனர். அதிபர் பதவியேற்பு விழா பொதுவாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டப்பேரவைக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும் சூழ்நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக மைதானத்தில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து