முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீது தாக்குதல்: ஜி-20 நாடுகள் இடையே வேறுபாடு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

செயின்ட்பீட்டர்ஸ்பர்க், செப்.8  - சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்காவின்  திட்டம் குறித்து ஜி 20 நாடுகளின் தலைவர்தளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள வந்த சர்வதேச தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதினி விருந்தளித்தார். இந்த விருந்தில் அவரும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மற்ற நாட்டுத் தலைவர்களும் சிரியா விவகாரம் குறித்துப் பேசினர்.  சிரியா மீது தன்னிச்சையான முறையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஒபாமாவை வலியுறுத்தினர். சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது உலக பொருளாதாரத்தை பாதிப்பதோடு, எண்ணெய் விலையையும் உயர்த்தி விடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதை இத்தாலி நாட்டுப் பிரதமர் என்ரிகோ ரெட்டா இணையதளத்தில் தெரிவித்துள்ளார். சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது  சர்வதேச சட்டத்துக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணியாக இருக்கும்  என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில்  ஜி 20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளைப் பொறுத்த வரை சிரியா மீதான நடவடிக்கையை ஆதரிக்கும் நாடுகளை விட எதிர்க்கும் நாடுகளே அதிகம் என்றார் அவர்.

ஐ.நா. ஒப்புதல் இல்லாமல் சிரியா மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானது என்று ரஷியாவும், சீனாவும் கூறியுள்ளன. அமெரிக்காவை பிரான்ஸ் மட்டுமே ஆதரிக்கிறது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச கூட்டணி ஏற்படுத்துமாறு இந்த உச்சி மாநாட்டில் முயற்சி எடுக்க ஒபாமா முனைந்ததாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago