முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி பணிகளில் பதவிக் காலம் முடிந்த பிரதிநிதிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
OPS 2024-11-11

Source: provided

சென்னை: பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவரையும் மிரட்டி அரசுப் பணிகளில் தலையிடுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.   

தமிழ்நாட்டில், 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்ததையடுத்து, அந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தினைக் கவனிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.  இருப்பினும், பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் தலையீடு அதிகரித்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, புதிய மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது  உள்ளிட்ட விஷயங்களில் பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தலையிடுவதாக  புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் விளைவாக, தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம், சாலைப் பணிகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன.  

முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, தனி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்து, மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து