முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாகத் தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய  முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  32.23 லட்சம்  வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் எனப் புகழப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின்  இத்தகைய சிறப்பான  நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில் வேறு எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சியாக 9.69%  வளர்ச்சி கண்டு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 9.69%. இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.

ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம் 

தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் 

புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-இல் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு,  2022 திராவிட மாடல் ஆட்சியில்  முதலிடம் .

பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம்  

இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவிகிதம் - முதலிடம் 

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் 

அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் (RAMSAR Sites) கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம் 

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில்  தமிழ்நாடு முதலிடம்  

இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம் 

தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம் 

அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.

உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புணே, ஹைதராபாத், பெங்களூரூ  முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு  இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து