முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரம்ப் வழங்கிய ‘சிறப்பு’ பரிசு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      உலகம்
Modi-Trump 2024-03-18

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு சிறப்புப் பரிசை வழங்கினார். அந்தப் பரிசில், ‘பிரதமரே நீங்கள் சிறந்தவர்’ என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

‘அவர் ஜர்னி டுகெதர்’  என்ற காபி டேபிள் புத்தகத்தில் தான் ட்ரம்ப் இவ்வாறு எழுதிக் கொடுத்துள்ளார். 320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 'ஹவுடி மோடி'  மற்றும் 'நமஸ்தே டிரம்ப்'  நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்தப் புத்தகத்தை ட்ரம்ப் ஒவ்வொரு பக்கமாக பிரதமர் மோடியிடம் திருப்பிக் காட்டிப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “இந்தியப் பிரதமர் மோடி இங்கே வருகை தந்திருப்பது சிறப்பானது. அவர் என்னுடைய நீண்ட கால நல்ல நண்பர். எங்களுக்குள் சிறப்பான உறவு இருக்கிறது.” என்றார்.’

இந்தியா, மோடியுடனான தனது நல்லுறவை சிலாகித்த ட்ரம்ப் அதேவேளையில் அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கவலையும் தெரிவித்தார். ‘இந்தியா எங்களுக்கு விதிக்கும் வரியைத்தான் நாங்கள் அவர்களுக்கு விதிக்கிறோம். இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் சில அற்புதமான ஒப்பந்தங்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்’ என்றார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு மட்டுமல்லாது ராணுவம், வர்த்தகம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப துறை, அணுசக்தித் துறையிலும் அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து