முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லியில் வரும் 20-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது?

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      இந்தியா
Delhi 2023 08 14

Source: provided

புதுடில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் பிப்.20ஆம் தேதி பா.ஜ.க.வின் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள்  தெரிவித்தன.

டில்லி சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த பிப்.5-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க., 26 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் ஆட்சிக்கு வருகிறது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பல எம்எல்ஏக்களின் பெயா்கள் முதல்வா் மற்றும் அமைச்சா் பதவிகளுக்குப் பரிசீலனையில் உள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவாலைத் தோற்கடித்த பா்வேஷ் வா்மா மற்றும் டில்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவா்கள் விஜேந்தா் குப்தா மற்றும் சதீஷ் உபாத்யாய ஆகியோா் முதல்வா் பதவிக்கு பரிசீலிக்கப்படும் நபா்களில் முன்னணியில் உள்ளனா். மேலும் பவன் சா்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் உள்ளிட்டோரும் முதல்வா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.

 இதனிடையே டில்லி முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் தற்போது நாளை (பிப்.19) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் அன்று நடைபெறும் கூட்டத்தில் பதவியேற்பு விழா குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் டில்லி ராம்லீலா மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.

இதில் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து