முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜென்டில்வுமன்’ விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      சினிமா
Jentlewoman-Review 2025-03-

Source: provided

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். இதனால் கடும் கோபமடையும் லிஜோமோல் ஜோஸ், கணவரை கொலை செய்து விடுகிறார். இதற்கிடையே, ஹரி கிருஷ்ணன் காணவில்லை என்று அவரது காதலி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீசார், ஹரி கிருஷ்ணனுக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டுபிடித்தார்களா?, கணவரை கொலை செய்துவிட்டு சகஜமாக உலா வரும் லிஜோமோல் ஜோஸ் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாரா? இல்லையா ? என்பதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் சொல்வதே ‘ஜென்டில்வுமன்’. கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் செய்த தவறை அறிந்து சாதாரண பெண் போல் கலங்கினாலும், அடுத்த கணமே சற்றும் எதிர்ப்பார்க்காத ஒரு விசயத்தை செய்து பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார்.  நாயகனாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன் நல்ல பிள்ளையாக இருந்தாலும், சேட்டை மன்னனாக வலம் வந்திருக்கிறார்.  கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன்,  பெண் கதாபாத்திரங்கள் போடும் திட்டம், நம்பும்படியாக இல்லாதது சற்று பலவீனப்படுத்தும் வகையில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து