முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
chennai-high-court 2025-01-01

Source: provided

சென்னை : மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.

கடந்த 1997 டிசம்பர் 15 முதல் ஜூன் 20, 2000 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை 6-வது கூடுதல் அமர்வு கோர்ட்டு நீதிபதி கே.தனசேகரன் நேற்று முன்தினம் விசாரித்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை உறுதிசெய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. இதன்படி ஜவாஹிருல்லா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹைதர்அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோரின் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். மேலும் ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து