எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 43 வயதான மகேந்திர சிங் டோனி தனது 18-வது ஐ.பி.எல். சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது மைல்கல் சாதனைகளை பார்க்கலாம்.
மவுசு குறையவில்லை...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் டோனிக்கான மவுசு என்பது இம்மியளவும் குறையவில்லை. சி.எஸ்.கே. அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட செல்லும் இடமெல்லாம் மஞ்சள் படைகள் படையெடுப்பே அதற்கு சான்று. புள்ளிவிவரங்கள், அதன் நம்பர்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர் டோனி. விளையாட்டை நேசிக்கும் அனைவரும் இதை ஏற்பாளர்கள். இருப்பினும் ஐ.பி.எல். களத்தில் அவரது நம்பரும் பேசுகிறது.
அதிக முறை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை பட்டம் வென்று கொடுத்த கேப்டன். 10 முறை ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை விளையாடி உள்ளது. டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அதிக முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதோடு 2010, 2014 ஆகிய சீசன்களில் டோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பட்டம் வென்றுள்ளது.
252 சிக்ஸர்கள்...
ஐ.பி.எல். களத்தில் டோனி மொத்தமாக 264 போட்டிகளில் விளையாடி 5,243 ரன்களை எடுத்துள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 234 போட்டிகளில் விளையாடி 4,669 ரன்கள் எடுத்துள்ளார். 149 கேட்ச் மற்றும் 41 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் 84. மொத்தம் 252 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரது விக்கெட் கீப்பிங் திறனுக்கு நிகரானவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட இன்று இல்லை என்று சொல்லலாம்.
பின்புலம்...
டோனி என்பவர் அனைவருக்கும் பிடித்த போக முக்கிய காரணம் அவரது பின்புலம். அவர் கிரிக்கெட்டில் சாதித்த அவரது விடாமுயற்சி, மன உறுதியின் காரணமாகவே அவருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்க காரணம்.
சீசன் வாரியாக செயல்பாடு...
கடந்த 2024 சீசனில் நீளமான முடி வைத்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசி சில ஓவர்களில் களத்துக்கு வந்து சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.
2023 சீசனில் அவரது தலைமையிலான சி.எஸ்.கே. அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
2022 சீசனில் அணியில் கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சி.எஸ்.கே. வெளியேறியது. இந்த சீசனில் 232 ரன்களை டோனி எடுத்தார்.
2021 சீசனில் டோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. கரோனா பரவல் காரணமாக இந்த சீசனில் பிற்பாதி போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்றது.
2020 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என டோனி பேசி இருந்தார். இந்த சீசனில் 200 ரன்களை டோனி எடுத்தார்.
2019 சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார் டோனி. மொத்தம் 416 ரன்கள் எடுத்தார்.
2018 சீசனில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். அரங்கில் விளையாடியது. அப்போது மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 455 ரன்களை டோனி எடுத்தார்.
2017 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டோனி விளையாடி இருந்தார். அந்த முறை இரண்டாவது இடம் பிடித்து புனே அணி தொடரை நிறைவு செய்தது. அந்த அணிக்காக டோனி 574 ரன்களை 30 போட்டிகளில் எடுத்தார்.
2016 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை டோனி கேப்டனாக வழிநடத்தினார். இந்த சீசனில் 284 ரன்களை டோனி எடுத்தார்.
2015 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீசனில் 372 ரன்களை டோனி எடுத்தார்.
2014 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த சீசனில் 371 ரன்களை டோனி எடுத்தார்.
2013 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது சென்னை. இந்த சீசனில் 461 ரன்களை டோனி எடுத்தார்.
2012 சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 358 ரன்களை டோனி எடுத்தார்.
2011 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் 392 ரன்களை டோனி எடுத்தார்.
2010 சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது டோனி தலைமையிலான சி.எஸ்.கே.. இந்த சீசனில் 287 ரன்களை டோனி எடுத்தார்.
2009 சீசனில் அரை இறுதியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 332 ரன்களை டோனி எடுத்தார்.
2008 சீசனில் இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 414 ரன்களை டோனி எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
சூர்யவன்ஷி புதிய சாதனை
03 Jul 202519 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
03 Jul 2025புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, “விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது” என
-
எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது: இலங்கை அமைச்சர் அதிரடி
03 Jul 2025இலங்கை: தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
-
இ.பி.எஸ். சுற்றுப்பயணம்: பா.ஜ.க.வினருக்கு அழைப்பு
03 Jul 2025சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
-
கானா பயணத்தை முடித்துக் கொண்டு டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
03 Jul 2025ஆக்கரா: கானா பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
-
கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை இ.பி.எஸ். வலியுறுத்தல்
03 Jul 2025சென்னை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய தி.மு.க.
-
மிக சுவையான உணவு கிடைக்கும் 100 இடங்களில் 6 இந்திய நகரங்கள்
03 Jul 2025புதுடில்லி: சுவை மிகுந்த உணவு கிடைக்கும் உலகின் டாப் 100 நகரங்களில், 6 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்
03 Jul 2025நத்தம்: டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி திருச்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
03 Jul 2025நார்த்தம்டான்: வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டத்தால் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.