முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை காலி செய்ய பாக்.கிற்கு இந்தியா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      உலகம்
Central-government 2021 12-

நியூயார்க், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அதனை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி நடவடிக்கைகள் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய பர்வதனேனி ஹரீஷ்:-

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இனி எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது. பாகிஸ்தான் பிரதிநிதி இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. பாகிஸ்தான் பிரதிநிதி இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்ததை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதுபோன்று தொடர்ச்சியாக தெரிவிக்கப்படும் கருத்துகளால் அவர்கள் செய்யும் சட்டவிரோத உரிமை மீறல்களையோ, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையோ நியாயப்படுத்த முடியாது. தங்களது பிளவுவாத கருத்துக்களின் மூலம் இந்த மன்றத்தின் கவனத்தை திசை திருப்ப வேண்டாமென்று பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம் என்றார். இந்தியா அரசியலமைப்பின் 370-வது பிரிவான ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்தது. இதன்மூலம் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து