முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் 26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      அரசியல்
Vijay 2024-11-25

சென்னை, கோவையில் வருகிற  26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  கட்சியில் புதிதாக சேர்ந்த வர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருக்கிறது.  இதற்கிடையே கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அடுத்த கட்டமாக பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி கடந்த சில மாதங்களாக கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு வருகிற 26, 27-ம் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் நடைபெற இருக்கிறது.

இந்த மாநாடு 2 மண்டலங்களாக நடக்கிறது. கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களுக்கான மாநாடு நடைபெறுகிறது. 26-ம்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தை சமீபத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாநாட்டுக்கான முன் ஏற்பாட்டு பணிகளில் கோவை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து