முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனைமலையாறு, நல்லாறு விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
duraimurugan-2023-05-01

Source: provided

சென்னை : ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பிய கொங்கு ஈஸ்வரன், ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட 2 திட்டங்கள் குறித்து கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசியபோது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "பரம்பிகுளம் ஆழியாறு ஒப்பந்தத்தின்படி, ஆனைமலையாறு நல்லாற்றில் இருந்து தண்ணீரை திருப்பி கொள்ளலாம். கீழே கேரளா அரசு அணை கட்டி உள்ளது. இந்த அணை கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கேரளா அரசுக்கு எத்தனையோ முறை கடிதம் எழுதி உள்ளோம். ஆனால் கேரளா அரசு மெத்தனமாக உள்ளது. மீண்டும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்து உள்ளோம்" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து