முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் சேவை எப்போதும் நினைவில் இருக்கும் - பிரதமர் மோடி

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      இந்தியா
Modi 2024-11-25

Source: provided

புதுடெல்லி : சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ரோம் நகருக்கு சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மக்கள் சார்பாக போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து