முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு நிலங்களில் வளர்ச்சி பணிகள்: தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      தமிழகம்
Nawaz-Ghani 2023 06 18

Source: provided

ராமேசுவரம் : வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலி இடங்களில்  வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து அனுமதிகளை வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு, 'தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் வக்பு நிறுவனங்களின் அனைத்து முத்தவல்லிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலியாக, பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரசாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் அனைத்து அனுமதிகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்க தயாராக உள்ளது, என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில், வளர்ச்சிப் பணிகளின் தொடக்கமாக வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம் தாஹிர் முகமது கான் மாஸ்க் வக்புவிற்கு பாத்தியப்பட்ட பயன்படுத்தப்படாமல் காலியாக இருந்த 3.11 ஏக்கர் நிலத்தில் பேர்ணாம்பட்டு நகர மற்றும் சுற்றுவட்டார கிராம புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பேர்ணாம்பட்டு முஸ்லிம் எஜுகேஷன் சொசைட்டி நிர்வாகம் முன் வைத்த  கோரிக்கைக்கு தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.  

இந்த பொறுப்பில் அனைவரும் ஒருங்கிணைந்து சமுதாயம் பயன்படும் வண்ணம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.' இவ்வாறு நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து