முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது: மானியக்கோரிக்கைகளுக்கு விரிவான பதில் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Stalin 2024-11-26

சென்னை,  சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது.  மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார்         

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் (15-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு  ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். இதன் மீது சட்டசபையில் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். அவ்வப்போது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இந்த மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார். அப்போது காவல் துறை தீயணைப்பு துறைக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

சட்டசபைக் கூட்டத் தொடரில் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். அதே போல் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார்.

இதே போல் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மூர்த்தி கோவி. செழியன் ஆகியோரும் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கான மசோதாவும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் அனைத்தும் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அத்துடன் சட்டசபைக் கூட்டம் இன்று முடிவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து