எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர்.
இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. முதல் இடம்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்.சி.பி. அணி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது. 2வது இடத்தை குஜராத்தும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை டெல்லியும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
_________________________________________________________________________________________________
ராகுலை நக்கல் அடித்த கோலி
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதனையடுத்து இது என்னோட ஹோம் கிரவுண்ட் என பெங்களூரு மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த சைகையை டெல்லி மைதானத்தில் ஜாலியாக ரீ-க்ரியேட் செய்து விராட் கோலி கிண்டலடித்தார். முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
சாதனை படைத்த புவனேஸ்வர்
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் புவனேஸ்வர் குமார் இதுவரை 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
_________________________________________________________________________________________________
மலிங்கா சாதனையை முறியடித்த பும்ரா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்காவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். மும்பை அணிக்காக பும்ரா இதுவரை 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக மும்பை அணிக்காக மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.
_________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. குறித்து ரெய்னா
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது: ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சி.எஸ்.கே. வாங்கவில்லை?
இந்த ஐ.பி.எல். ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு. தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 6 days ago |
-
தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
02 Aug 2025சென்னை, தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.
-
ஆணவப்படுகொலைக்கு உரிய நீதி: சீமான் உறுதி
02 Aug 2025சென்னை : ஆணவப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என சீமான் உறுதியளித்துள்ளார்.
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
02 Aug 2025சென்னை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.1,120 ஏற்றம் கண்டு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா..? - மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-08-2025.
02 Aug 2025 -
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு
02 Aug 2025சென்னை, டாக்டர் அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் மதன்பாப் காலமானார்
02 Aug 2025சென்னை : திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப் உடல்நலக்குறைவால் காலமானார்.
-
அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் மாற்றி விடுதலை செய்யப்பட்ட கைதி
02 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் கைதி மாற்றி விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 2 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
ஓ.பி.எஸ். அரசியல் வாழ்க்கை குறித்து போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி
02 Aug 2025புதுக்கோட்டை, “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
-
உத்திரமேரூர் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
02 Aug 2025சென்னை : உத்திரமேரூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
02 Aug 2025சென்னை, தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
-
பாலியல் வழக்கில் தண்டனை அறிவிப்பு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 'ஆயுள்'
02 Aug 2025பெங்களூரு, பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் ஆனந்த் படத்தை பயன்படுத்த தடை
02 Aug 2025சென்னை, த.வெ.க. நிகழ்ச்சிகளில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20-வது தவணை தொகையை விடுவித்தார் பிரதமர்
02 Aug 2025டெல்லி, பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகையை விடுவித்தார்.
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
02 Aug 2025தூத்துக்குடி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் முதல்வர்
02 Aug 2025சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இ.பி.எஸ். வழிபாடு
02 Aug 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழிபாடு செய்தார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தேன்: பிரதமர் மோடி பேச்சு
02 Aug 2025காந்தி நகர், கடவுள் சிவபெருமான் ஆசியுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
02 Aug 2025சென்னை : இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்
02 Aug 2025தேனி, அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
02 Aug 2025சென்னை, பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒரேநாளில் 106 பேர் பலி
02 Aug 2025காஸா : காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
-
கச்சா எண்னெய் இறக்குமதி விவகாரம்: இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளது: ட்ரம்ப்
02 Aug 2025வாஷிங்டன் : இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
நீதிமன்றத்தில் அழுத ரேவண்ணா
02 Aug 2025பெங்களூரு : முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுதார்.