முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்புதல் பெற்றே பாகிஸ்தான் பெண்ணை மணந்தேன்: சி.ஆர்.பி.எப். வீரர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      இந்தியா
Pak 2025-05-04

Source: provided

ஸ்ரீநகர் : பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகக் கூறி சி.ஆர்.பி.எப். வீரரான முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் முறையான ஒப்புதல் பெற்றே தான் அப்பெண்ணை திருமணம் செய்ததாக முனீர்  தெரிவித்துள்ளார்.

“என்னை பணிநீக்கம் செய்துள்ளார்கள் என்பதை ஊடகம் மூலமாகவே அறிந்தேன். அதன் பின்பு தான் எனக்கு சி.ஆர்.பி.எப். கடிதம் கிடைத்தது. அதில் நான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது எனக்கும், எனது குடும்பத்துக்கும் அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை சி.ஆர்.பி.எப். தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன்.

அப்போது என்னிடம் இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். இதற்காக எனது தரப்பில் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். அனைத்தும் முறைப்படி இருப்பதாகக் கருதினேன்.

எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். 72-வது பட்டாலியனில் இருந்து 41-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டேன். சட்ட அமைப்பு மூலம் எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என முனீர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்தது மற்றும் அவரை இந்தியாவில் தங்க அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்பட்டு பணியில் இருந்து முனீர் அகமதை சி.ஆர்.பி.எப். நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து