முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுருக்கு லைக்? கோலி விளக்கம்

சனிக்கிழமை, 3 மே 2025      விளையாட்டு
Veert-Coli-Dhoni 2025-03-24

Source: provided

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) நடிகையின் புகைப்படத்துக்கு லைக் செய்திருந்தார். இது நடிகையின் அசலான வலைதள பக்கம் கிடையாது.  இந்தச் சர்ச்சையில் எக்ஸ், இன்ஸ்டாகிராம் என விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் விராட் கோலி கூறியதாவது: எனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளியர் சர்ச் பீட் செய்யும்போது அல்காரிதத்தின் தவறுதலால் விருப்பக் குறியிட்டதாகக் காட்டியிருக்கும். இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தேவையில்லாத ஊகங்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, விராட் கோலி அந்தப் பக்கத்தை அன்லைக் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________________________________________________

ஜோஸ் பட்லர் புதிய சாதனை 

நடப்பு ஐ.பி.எல். தொடரின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன் - ஐதராபாத்  அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் ரன்கள் 224 எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 64 ரன்களும் (37 பந்துகளில், 4 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்தனர்.

இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் 12 ரன்கள் எடுத்தபோது, தனது டி20 வாழ்க்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். ஐ.பி.எல்.லில் 4,000 ரன்களை நிறைவு செய்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றுள்ளார். மேலும், 4,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய மூன்றாவது வேகமான பேட்ஸ்மேனாக என்ற சிறப்பையும் பட்லர் பெற்றுள்ளார். ஐ.பி.எல்.லில் 116 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பட்லர், 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதில், 7 சதங்கள் மற்றும் 23 அரைசதங்களும் அடங்கும்.

________________________________________________________________________________________________________

கோலிக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஆர்.சி.பி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் விராட் கோலி பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் டிரெய்லர் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. 

 

அந்த டிரெய்லரில் விராட் கோலி பேசியதாவது: ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்யவேண்டும்.  என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார். எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை.  அவர்களுக்கு பரிணமிக்க, அழுத்தத்தைக் கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட, உலகக் கோப்பை வரும்போது அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாட 2 வருட சுழற்சி தேவை. இதைப் புரிந்துகொண்டே டி20 போட்டிகளை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து