முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் சாதனை முறியடிப்பு: சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்

சனிக்கிழமை, 3 மே 2025      விளையாட்டு
Sai-Sutharson 11-04-2025

Source: provided

அகமதாபாத் : ஐ.பி.எல். தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சச்சின் சாதனை முறியடிப்பு...

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல். சீசனில் மட்டும் சாய் சுதர்சன் 504 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஐ.பி.எல். சீசனில் முதல்முறையாக 500 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்திய சாய் சுதர்சன் சச்சின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

டெஸ்ட் அணியில்... 

இதற்கு முன்பாக சச்சின் 44 இன்னிங்ஸில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது, சாய் சுதர்சன் இதை வெறும் 35 இன்னிங்ஸில் செய்திருக்கிறார். முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சாய் சுதர்சனை இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டுமென சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

சிறப்பு போஸ்டர்...

ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக 1,500 ரன்கள் அடித்தவர்கள்:- சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 35 இன்னிங்ஸ்,

சச்சின் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்) - 44 இன்னிங்ஸ், ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே) - 44 இன்னிங்ஸ், ஐ.பி.எல். இதற்காக சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்தச் சாதனைக்காக பலரும் சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து