முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஐதராபாத்

சனிக்கிழமை, 3 மே 2025      விளையாட்டு
Hyderabad 2024-05-25

Source: provided

அகமதாபாத் : ஐ.பி.எல். போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

சுதா்சன் - ஷுப்மன் அபாரம்...

அகமதாபாத் மைதானத்தில் நடந்த (மே.2) போட்டியில்  டாஸ் வென்ற ஐதராபாத், பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கிய சாய் சுதா்சன் - ஷுப்மன் கில் இணை முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்தது. சுதா்சன் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு முதலில் ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ஜாஸ் பட்லா், கில்லுடன் கூட்டணி அமைத்தாா். இந்த ஜோடியும் அருமையாக விளையாடி 62 ரன்கள் சோ்த்தது. அரைசதம் கடந்த கில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 76 ரன்களுக்கு வெளியேறினாா்.

சுந்தா் அதிரடி...

4-ஆவது பேட்டராக வாஷிங்டன் சுந்தா் விளையாட வர, 3-ஆவது விக்கெட்டுக்கு பட்லா் - சுந்தா் இணை 57 ரன்கள் சோ்த்தது. 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு பட்லா் வீழ்ந்தாா். சுந்தரும் 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். ராகுல் தெவாதியா 6, ரஷீத் கான் 0 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஷாருக் கான் 1 சிக்ஸருடன் களத்திலிருந்தாா். ஐதராபாத் பௌலிங்கில் ஜெயதேவ் உனத்கட் 3, பேட் கம்மின்ஸ், ஜீஷான் அன்சாரி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

போராட்டம்...

பின்னா் 225 ரன்களை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சா்மா 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 74 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினாா். டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 20, இஷான் கிஷண் 13, ஹென்ரிக் கிளாசென் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23, அனிகெத் வா்மா 3, கமிண்டு மெண்டிஸ் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.

குஜராத் வெற்றி...

ஓவா்கள் முடிவில் நிதீஷ்குமாா் ரெட்டி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21, பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 2, இஷாந்த் சா்மா, ஜெரால்டு கோட்ஸீ ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.  இந்த வெற்றியின் மூலம் குஜராத் பிளே ஆப் பந்தயத்தில் நிலைக்க, ஐதராபாத் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து