முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்; அபுதாபியில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்...!

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      உலகம்
Air-India

Source: provided

அபுதாபி : இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்,  டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம்  அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. ஜார்டான் வான் பரப்பில் இருந்து இஸ்ரேல் வான் பரப்பிற்குள் ஏர் இந்தியா விமானம் செல்லவிருந்தது.

அப்போது, டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம் உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், விமானம் அபுதாபியில் பத்திரமாக தரையிறங்கியது. மேலும், டெல் அவிவ் , டெல்லி இடையேயான விமான சேவை நேற்று ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை விமான நிலையம் அருகே உள்ள சாலையில் விழுந்துள்ளது. இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி இந்த ஏவுகணை சாலையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து