முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை

சனிக்கிழமை, 3 மே 2025      அரசியல்
BJP-2025-05-03

சென்னை, சென்னையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்தினார்.    

சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அவரை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் வரவேற்றனர்.

இந்நிலையில் சென்னையில் தமிழக பா.ஜ.க. மாநில மையக்குழு கூட்டம் நேற்று  நடைபெற்றது. இந்த கூட்டம், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  முன்னிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில்,  மாநில மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி,  தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மாநில கவர்னரும்,  மாநில தலைவரும் தமிழச்சி சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து