முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ப் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்

வியாழக்கிழமை, 8 மே 2025      விளையாட்டு
cricket

 அகமதாபாத், போர்ப் பதற்றம் எதிரொலியால் பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்...

நடப்பு ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

விமான நிலையங்கள் மூடல்...

இதனால், இந்தியாவில் வடமாநிலங்களில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஹிமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 11) அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளது. இதனை குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் அனில் பட்டேல் உறுதிபடுத்தியுள்ளார்.

இடமாற்றம்...

இதுகுறித்து அனில் பட்டேல் கூறுகையில், “பி.சி.சி.ஐ. எங்களிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நாங்கள் அதை உறுதி செய்துள்ளோம். இந்தப் போட்டி மதியம் நடைபெறும்” என்று தெரிவித்தார். தர்மசாலாவில் நடைபெறும் பஞ்சாப் - டில்லிஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் எவ்வாறு குஜராத் வருவார்கள் என்று தெரியவில்லை. சண்டீகர் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அதேவேளையில் சாலை வழியாக தில்லிக்குச் சென்றால் 10 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இது பி.சி.சி.ஐ. சவாலாகவே இருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து