முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      இந்தியா
Delhi 2024 08 03

புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூருக்குப்பிறகு, நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் சூழலில் வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசரநிலையைச் சமாளிக்க மருத்துவ மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். பதட்டமான பகுதிகளில் கூடுதல் படைகளை நிறுத்துகிறோம். இரவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பதட்டங்களைத் தொடர்ந்து, நாட்டில் 24 விமான நிலையங்கள் ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், டெல்லிக்கு செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா கேட்டில் பகுதியில் மக்கள் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து