முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மாவை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விராட் கோலி முடிவு? - மறு பரிசீலனை செய்ய பி.சி.சி.ஐ. கோரிக்கை

சனிக்கிழமை, 10 மே 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

மும்பை : ரோகித் சர்மாவை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து  ஓய்வு பெற விராட் கோலி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலியின் முடிவை மறு பரிசீலனை செய்ய பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

நட்சத்திர பேட்ஸ்மேன்... 

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான இவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

விமர்சனம்...

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. ரோகித் சர்மா கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியான நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வு பெற முடிவு...

இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பி.சி.சி.ஐ.க்கு தெரிவித்துள்ளார். முக்கியமான இங்கிலாந்து தொடருக்கு எதிராக விராட் கோலியின் இந்த முடிவு பி.சி.சி.ஐ.க்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தனது முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யும்படி பி.சி.சி.ஐ., விராட் கோலியுடன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. 

முடிவுக்கு வருகிறது...

ஒருவேளை ஓய்வு முடிவில் விராட் கோலி உறுதியாக இருந்தால் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடும்படி பி.சி.சி.ஐ. வற்புறுத்தலாம். எப்படி இருந்தாலும் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவிருக்கிறது. விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் அடித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்தது ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து