முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக்., போரை நிறுத்தியது நான் தான் : அதிபர் ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      உலகம்
Trump 2024-11-06

Source: provided

தோஹா : “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான் தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்  ஆறாவது முறையாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்தியா. 

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் முதலில் அறிவித்தார். இதையடுத்தே இந்தியாவும், பாகிஸ்தானும் அது தொடர்பாக பொதுவெளியில் பேசின. போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்தது சர்ச்சையானது.

“நான் அதைச் செய்தேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், கடந்த வாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க நான் உதவினேன். அது நடக்காமல் போயிருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகி இருக்கும்” என கத்தாரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய போது ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவியேற்றது முதலே இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல், உக்ரைன் - ரஷ்யா போர் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து