முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது: திருமாவளவன்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Thirumavalavan 2024 09 14

Source: provided

விழுப்புரம் : நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் எழுச்சி பேரணி தொடர்பாக மண்டல கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் (மே 15-ம் தேதி) இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், “மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. வக்பு திருத்தச்  சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 5-வது கட்டமாக திருச்சியில் வரும் 31-ம் தேதி, மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் பேரணி நடத்த உள்ளோம்.

பல அரசியல் கட்சிகள் எண்ணிக்கையை குறிப்பிட்டு மாநாடு நடத்தி வருகின்றனர். சிலர் முழு நிலவு மாநாடு என்கின்றனர். இதில் ஒரு அரசியல் ரீதியாக கருத்து இருக்காது.  வெல்லும் ஜனநாயகம், மண்ணுரிமை காப்போம், மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் நாம் நடத்தும் அனைத்து மாநாடுகளிலும் ஆயிரம் பொருள் அடங்கி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம், வக்பு திருத்தச் சட்டம், 370-வது சட்டப்பிரிவு ரத்து ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.   அரசியலமைப்பு சட்டம் நீர்த்துப் போனால், அரசியல் செய்ய முடியாது. சாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்ய முடியாது. அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும்.

இது நமக்கான களம். சினிமா ஸ்டார்கள் நமக்கு போட்டி ஆக முடியாது. நம்முடைய களம் வேறு. நம் களத்தில் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது என்றார். இக்கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து