முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களிடம் ஏற்கனவே கோப்பை உள்ளது: செய்தியாளர்களுக்கு படிதார் பதிலடி

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

பெங்களூரு : எங்களிடம் ஐ.பி.எல். கோப்பை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது  என   ஆர்.சி.பி. கேப்டன்  ரஜத் படிதார்  தெரிவித்துள்ளார்.

இன்று தொடக்கம்...

எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

பிளே ஆப் வாய்ப்பு... 

நடப்பு தொடரில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. இதனால் 18 ஆண்டு கால கோப்பை ஏக்கத்தை இந்த முறை புதிய கேப்டன் தலைமையில் பெங்களூரு தணிக்கு என்று அந்த அணியின் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

கோப்பை உள்ளது...

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஜத் படிதாரிடம், ஆர்.சி.பி. அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த படிதார், "எங்களிடம் கோப்பை உள்ளது. எங்களது மகளிர் அணி ஏற்கனவே கோப்பையை வென்றுள்ளது. அது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கிறது. எனவே எங்களிடம் கோப்பை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது" என யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்தார். 2024-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை சுட்டிக்காட்டி அவர் இந்த பதிலை அளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து