முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி ஓய்வு பெற இதுவே சரியான தருணம் : முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      விளையாட்டு
Ravi-Shastri 2023 04 12

Source: provided

டெல்லி : ஓய்வுக்கு முன்பாக விராட்கோலியிடம் பேசியதாக தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

சரியான நேரம்....

டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முன் தான் கோலியுடன் உரையாடியதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அப்போது கோலி தனது முடிவில் தெளிவாகவே இருக்கிறார் என்பதும் அவர் ஓய்வு பெற சரியான நேரம் இதுவே என்பதும் புரிந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். கோலி - ரவி சாஸ்திரி கூட்டணிதான் இந்திய அணியின் டெஸ்ட் எழுச்சிக்குப் பெரிய காரணமாக அமைந்தது. இருவரும் புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தனர், சிறந்த பந்து வீச்சாளர்கள், நல்ல துணைப் பயிற்சியாளர்கள் என்று இந்திய அணியை டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 நிலைக்கு இட்டுச் சென்றதில் விராட் கோலி - ரவி சாஸ்திரி பங்களிப்பை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

வருத்தம் இல்லை...

ஓய்வு பெறுவது குறித்து விராட் கோலிக்கு எந்த வருத்தங்களும் இல்லை என்று தான் பேசிய அளவில் தெரிந்தது என்றார் ரவி சாஸ்திரி. “விராட் கோலியிடம் ஓய்வுக்கு முன்பு அது தொடர்பாகப் பேசினேன். அவர் மனதளவில் தெளிவாகவே அந்த முடிவை எடுத்துள்ளார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுத்துள்ளார். அவருக்கு ஓய்வு குறித்து வருத்தங்கள் இல்லை. நான் ஒன்றிரண்டு கேள்விகளை அவரிடம் கேட்டேன். அது ரகசிய உரையாடல். அப்போது அவருக்கு ஓய்வு பெறலாமா, வேண்டாமா என்ற தயக்கமெல்லாம் இல்லை. தெளிவாகவே இந்த முடிவை எடுத்ததாக என்னிடம் கூறினார். 

பங்களிக்க முடியும்.... 

அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, ‘சரி இதுவே ஓய்வுக்கு சரியான தருணம்’ என்று நான் நினைத்தேன். அவருக்கும் வருத்தங்கள் இல்லை. ஆனால் அனைவரும் அவர் தொடர்ந்து ஆட வேண்டும் என்றுதான் விரும்பினர். ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் பங்களிக்க முடியும் என்று உறுதியாக கோலி நம்புகிறார். தொழில்முறை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ஆடுவார்.

பங்களிப்பு அபாரம்...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு குறித்து அவருக்கு வருத்தங்கள் இல்லாததற்குக் காரணம், அவர் பங்களிப்பு அபாரமானது, அனைத்தையும் அவர் அளித்து விட்டார் என்பதாலேயே இருக்கலாம். தனிப்பட்ட முறையில் பவுலரோ, பேட்டரோ, தன் வேலை முடிந்து விட்டால் முடித்துக் கொள்வர். ஆனால் கோலி அப்படியல்ல, அணி களமிறங்கி விட்டால் போதும் தானே அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும்.

ஆற்றல் மிகுந்தவர்... 

தானே அனைத்துக் கேட்ச்களையும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த கேப்டன். அவர்தான் களத்தில் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். இத்தனை ஈடுபாடு இருக்கும் போது ஏதோ ஒரு இடத்தில் போதும் என்ற நிலை ஏற்பட்டு விடும், ஆடுவது, ஓய்வு குறித்து அவர் பிரித்துப் பார்த்து அனைத்து வடிவங்களிலும் ஆட வேண்டும், அப்படிச் செய்யவில்லை எனில் அலுப்புத் தட்டி விடும், களைப்பு ஏற்பட்டு விடும். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இது துரதிர்ஷ்டமே, அவர் இன்னும் 2 ஆண்டுகள் ஆடியிருக்கலாம் என்பதே என் விருப்பம் என்றார் ரவிசாஸ்திரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து