முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரியற்ற வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு

சனிக்கிழமை, 17 மே 2025      உலகம்
Jaishankar 2023 06 08

நியூயார்க், அமெரிக்கப் பொருட்களுக்கான 100% வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.  இதை அமைச்சர் ஜெய்சங்கர்  மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா உலகின் மிக உயர்ந்த வரிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். அமெரிக்காவுக்கான தங்கள் வரிகளில் 100 சதவீதத்தைக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்” என ட்ரம்ப் கூறினார்.

இந்தியாவுடனான ஒப்பந்தம் விரைவில் வருமா என்று கேட்டபோது, ​​ட்ரம்ப்,  எல்லோரும் எங்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். எங்களுடன் தென் கொரியா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, ஆனால் நான் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்யப் போவதில்லை. நான் வரம்பை நிர்ணயிக்கப் போகிறேன். ஒப்பந்தங்களைச் செய்ய விரும்பும் 150 நாடுகள் என்னிடம் உள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.” என்றார்.

இதுகுறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இவை சிக்கலான பேச்சுவார்த்தைகள். எல்லாம் முடியும் வரை எதுவும் முடிவு செய்யப்படுவதில்லை. எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நன்மை பயக்கும்; அது இரு நாடுகளுக்கும் வேலை செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

அதேபோல். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், “அமெரி்க்க அதிபர் பூஜ்ய வரி விதிப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கிறார். நமது பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறார். இதற்கும், சிந்தூர் ஆபரேஷன் நிறுத்தத்துக்கும் என்ன தொடர்பு?” என்று கூறியிருந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து