முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு தேர்வில் 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகரம்

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
10-th-Eaam 2023 05 17

Source: provided

சென்னை : 10-ம் வகுப்பு தேர்வில் 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடந்து முடிந்தது. தேர்வு முடிவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம்  வெளியிட்டார். தேர்வு எழுதிய 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 பேரில், 4 லட்சத்து 78 மாணவர்கள், 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.  

இந்தநிலையில் கோவை, மதுரை, சேலம், கோவில்பட்டியில் 10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமரவேல். இவரது மகள்கள் மாயாஸ்ரீ, மகாஸ்ரீ இரட்டையர்களான இவர்கள் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருவரும் 475 மதிப்பெண்கள்  பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

மதுரை மாவட்டம் மேலும் அருகே உள்ளது. கீழையூர் இந்த ஊரை சேர்ந்தவர் வைரவன். இவரது மகன்கள் ராமநாதன்,லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் மேலும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர் ராஜன் - பாரதி செல்வி தம்பதியர். இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். இவர்கள் 2 பேரும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.   10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜுவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வக்கீல் சங்கர் கணேஷ். இவர் கோவில்பட்டி வக்கீல் சங்க தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மீனா. இந்த தம்பதியின் மகன்கள் ஹரிகரன், செந்தில் நாதன் இந்த இரட்டை சகோதரர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10- வகுப்பு பயின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் ஹரிஹரன், செந்தில்நாதன் இருவரும் தலா 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் மணி - தீபா தம்பதியின் மகள்கள் இரட்டையர்கள். இவர்களது பெயர் இதழ்யா மற்றும் இதழ்யாதினி. 2 பேரும் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இரட்டை சகோதிரிகள் இருவரும் 475 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து