முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டு கோடைக்கால மின் தேவை குறைவு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை : “கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளதாக   தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை, மின்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது, “மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 ஷிப்டுகளில், ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் 3 மேற்பார்வையாளர்கள் உட்பட 94 பணியாளர்களைக் கொண்டும், 45 மின்பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு 4 பேர் வீதம் 176 நபர்களைக் கொண்டும் 24x7 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், 9498794987 எண்ணுக்கு வரும் புகார்களை பெறுவதற்கு வசதியாக மின்னகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 65-ல் இருந்து 94 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிட மிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 கோடைக்கால மின் தேவை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. கோடை மழை பெய்து வருவது, காற்றாலை சீசன் தொடங்கி இருப்பது ஆகியவற்றால் இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் விஷயத்தில், மின்வாரியத்துக்கு எவ்வளவு தேவை உள்ளதோ அதைப் பெற்று பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது” என்று அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்னுற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து