முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., ஏவியது ஷாஹீன் ஏவுகணை: இந்திய ராணுவம் ஆய்வில் தகவல்

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Indian-Navy 2025-04-27

Source: provided

புதுடில்லி : ஷாஹீன் ஏவுகணை பாகிஸ்தான் ஏவியது இந்திய ராணுவம் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏவியதும், அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 மூலம் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதும், இப்போது தெரியவந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். அப்போது, இந்தியாவுக்கு எதிராக என்னென்ன ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது என்ற விவரங்கள், வெளியாகி வருகின்றன.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் என்ற ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியதை இந்திய இராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த ஷாஹீன் ஏவுகணையை, தரையிலிருந்து ஏவ முடியும். இது மார்ச் மாதம் 2015ல் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை, பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ஏவியுள்ளது. ஆனாலும் இந்திய பாதுகாப்பு படையினர், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 சுதர்சன சக்கரம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் அதை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். இதன் மூலம், பாகிஸ்தான் பெரிதாக நம்பியிருக்கும் ஷாஹீன் ஏவுகணை, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் எளிதில் சுட்டு வீழ்த்தப்படக் கூடியது என்ற உண்மை அம்பலம் ஆகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து