முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசரமாக தரையிறங்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      இந்தியா
Air

புதுடெல்லி, சேதமடைந்த விமானத்தை தரையிறக்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்.

டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் ஸ்ரீநகர் சென்றபோது திடீரென வானிலை மாறியதை அடுத்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி அனுமதி கோரியுள்ளார். அதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. விமானத்தின் மூக்குப் பகுதியில் சேதம் ஏற்பட்டதைக் கூறியும் பாகிஸ்தான் அனுமதி மறுத்த நிலையில் விமானி சாதுர்யமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

கடந்த புதன்கிழமை மாலை இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்றது. விமானம் அமிர்தசரஸ் நகரக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் விமானம் சேதமடைந்தது. இதையடுத்து, விமானத்துக்குள் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு பயணிகள் அனைவரும் கலக்கமடைந்தனர்.

விமானத்தை பாகிஸ்தான் வான்வெளிக்குள் திருப்ப முடிவெடுத்த விமானி, அதற்காக லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், இந்திய விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானியின் சாதுர்யம்’ - 227 பயணிகளுடன் இருந்த அந்த விமானம், கடுமையான வானிலைக்கு மத்தியில் ஸ்ரீநகரில் மாலை 6.30 மணி அளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

முன்னதாக, விமானம் ஸ்ரீநகரை நெருங்கியதும், விமானி அவசரநிலையை அறிவித்தார். அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆலங்கட்டி மழை காரணமாக விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்ததை அடுத்து, அவசர பழுதுபார்ப்புக்காக விமானம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து