எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் முதல் கட்டமாக சுகாதார சான்றிதழ் உள்ளிட்ட10 அரசு சேவைகளை
எளிமையாக்கும் எளிமை ஆளுமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதியோர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமச் சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சேவைகளில் தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து, அதிலுள்ள முக்கிய விதிமுறைகளை சீர்செய்து, "எளிமை ஆளுமை" திட்டத்தின் கீழ் அனைவரும் சேவைகளை உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது. "எளிமை ஆளுமை" திட்டத்தை துரிதப்படுத்த இரு குழுக்கள் அமைக்கப்பட்டு முதல் குழு மூத்த அதிகாரிகளை கொண்டு படிப்படியாக வருகின்ற முன்மொழிவுகளை ஆராய்ந்து ஆலோசித்து, பின்பு இரண்டாவது குழு சட்டத்தை பின்பற்றி எவ்வாறு எளிமைப்படுத்த முடியுமோ அவ்வாறு உத்தரவுகளையிட தலைமைச் செயலாளரின் தலைமையில் இயங்குகிறது.
வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 150 சேவைகளை இணையவழியில் இம்முயற்சியின் கீழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வணிக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவிட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெள்ளை வகை தொழிற்சாலைகளின் பட்டியலை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
எளிமை ஆளுமையின் மூலமாக, தற்போது நடைமுறையிலுள்ள நேரடி ஆய்வுகள், ஆவண சரிபார்ப்பு போன்ற முறைகளுக்கு மாற்றாக சுய சான்றிதழ், இணைய வழி-கே.ஒய்.சி., டிஜிட்டல் கையொப்பம் இன்னும் பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் எளிமையாக்கப்பட்ட சேவைகளை விரைவாக பெற வழிவகை செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக, பின்வரும் 10 சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்:
1. சுகாதார சான்றிதழ்:
ஒரு வளாகம் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதனை உறுதி செய்யும் பொருட்டு, சுகாதாரச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டடங்கள் அல்லது வளாகங்கள், வளாகத்தின் சுத்தம், கழிப்பறைகளின் சுத்தம், வளாகத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாத வகை ஏற்படுத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய சுகாதார நடைமுறை முறைபடுத்தலை உறுதி செய்ய வேண்டும். இந்நெறிமுறை, சுய சான்றிதழ் வடிவில் வழங்கப்படும்.
இச்சான்றிதழ் தேவைப்படும் வளாகங்களுக்கு கியூ.ஆர்.குறியீட்டுடன் அத்தகைய வளாகங்களின் பொறுப்பாளர்களின் உறுதிமொழியின் அடிப்படையில் உடனடியாக இணையதளத்தில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சான்றிதழ் பெற 3 மாதங்கள் வரை ஆகும் என்ற நடைமுறையை மாற்றி தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
2. பொது கட்டிட உரிமம்:
பொது கட்டிட உரிமச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை உரிமம் செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உரிமம் பெற 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்ற நிலை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் கியூ.ஆர்.குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக பெறும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
3. முதியோர் இல்லங்கள் உரிமம்:
முதியோர்களை பராமரிக்கும் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வருவதை ஊக்குவிக்க, முழு செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செயல்முறை இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, சுய சான்றிதழ் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. சான்றிதழின் காலவரம்பு 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும் என்ற நடைமுறையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
4. பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம்:
பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், அவற்றின் செயல்பாட்டிற்கு சம்பந்தமில்லாத, சிக்கலான ஆவண நடைமுறைகள் காரணமாகப் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த அத்தியாவசிய வசதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இணக்கத்தை அதிகரிக்கவும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையிலும், உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும் என்ற நடைமுறையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
5. மகளிர் இல்லங்கள் உரிமம் :
மகளிர் இல்லங்களைப் பதிவு செய்யும் செயல்முறை மிகவும் கடினமாகவும், அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், அலுவலர்கள் அதிக அளவிலான துணை ஆவணங்களைக் கோருவதாகவும் இருந்தது. தற்போது உரிமம் பெறும் முழு செயல்முறையும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் சுய சான்றிதழ் வழங்குவதன் மூலம் உரிமம் தானாகவே உருவாக்கப்படுகிறது. உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும் என்ற நிலையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
6. சொத்துமதிப்பு சான்றிதழ்:
சொத்துமதிப்பு சான்றிதழ் பெரும்பாலும் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒருவரின் நிதிநிலையை உறுதிப்படுத்த வங்கி இருப்புநிலை அறிக்கை, பட்டயக்கணக்கர் சான்றிதழ், வருமானவரி தாக்கல் போன்ற பல்வேறு மாற்று வழிகள் தற்போது உள்ள நிலையில் சொத்துமதிப்பு சான்றிதழ் நீக்கப்படுகிறது.
7. வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம்:
வெள்ளை வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மாசுபடுத்தாதவை அல்லது குறைந்த மாசுபடுத்தும் தொழிற்சாலைகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் வழக்கமான ஆய்வுகளின் சுமைகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெள்ளை வகை பட்டியலில் 37 தொழிற்சாலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன. பல்வேறு நிலைகளில் மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு, வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் 37ல் இருந்து 609 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த 609 வகை தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும் இயங்குவதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் நிலையான தொழில்துறை வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்கும், இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
8. புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ்:
புன்செய் நிலத்தை விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்கு, அதாவது குடியிருப்பு அல்லது வணிக கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு, வேளாண்மைத் துறையிடம் தடையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெறுவது கட்டாயமாகும். தற்போது முழு செயல்முறையும் இணையவழியில் மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை இணையவழியில் தாங்களாகவே சமர்ப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலர்கள், கோரிக்கையை ஆய்வு செய்து செயலாக்கத்திற்கு உட்படுத்த 21 நாட்கள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் 21 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படாவிட்டால், தடையின்மை சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தானாகவே உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
9. நன்னடத்தை சான்றிதழ்:
நன்னடத்தை மற்றும் பின்னணி சரிபார்ப்பு சான்றிதழ் பெற தனிநபர்கள், அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், பிறகு அவை காவல்துறையின் சரிபார்ப்பிற்காக அனுப்பப்படும். தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு எந்தவொரு தனிநபர், அரசு துறை, அரசுப் பொதுத்துறை நிறுவனம் அல்லது பிற அமைப்புகள்-நன்னடத்தை சான்றிதழை, இணையவழி மூலமாக விண்ணப்பித்து எளிமையாகவும், துரிதமாகவும் பெறலாம்.
10. அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ்
தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு அரசு ஊழியர் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க உயர் அதிகாரிகளுக்கு முன் தகவல் அளித்தல் / அரசிடம் தடையின்மை சான்றிதழைப் பெறுதல், துறையிடம் இருந்து அடையாள சான்றிதழைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும். கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, துறையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு முன் தகவல் கடிதம் அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும். இவ்வாறு படிப்படியாக நடப்பு ஆண்டில் மேலும் பல சேவைகளை எளிமையாக்கி, மக்களை மையப்படுத்திய நிர்வாகம், வெளிப்படைத்தன்மையாகவும் துரிதமாகவும் அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
"எளிமை ஆளுமை" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதியோர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமச் சான்றிதழ், மகளிர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்க சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை : மத்திய நிதி அமைச்சர் தகவல்
17 Dec 2025டெல்லி, வரி விதிப்பு விவகாரத்தை கவனமாக கையாண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.


