முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டியில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல: கேப்டன் ஷ்ரேயாஸ்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      விளையாட்டு
Punjab-team 2025-03-26

Source: provided

முல்லான்பூர் : ஆர்.சி.பி. உடனான தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சண்டையில் தான் தோற்றிருக்கிறோம் போரில் அல்ல என தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

ஆர்.சி.பி. வெற்றி...

முல்லான்பூரில் நடைபெற்ற குவாலிஃபயர் 1-இல் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய ஆர்.சி.பி. 10 ஓவர்களில் 106/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கவலைப்படவில்லை...

தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதாவது: இந்தநாளை மறக்க முடியாது. ஆனால், மீண்டும் டிராயிங் போர்ட்டுக்கு சென்று என்னென்ன தவறுகள் செய்தோம் என்று கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்தப் போட்டியில் கற்பதற்கு அதிகமாக இருக்கிறது. உண்மையில், என்னுடைய முடிவுகளுக்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திட்டமிட்டவை எல்லாமே சரியாக இருந்தது. அதைச் செயல்படுத்துவதில் தவறிவிட்டோம்.

போரில் அல்ல...

இந்த மாதிரியான குறைவான இலக்கை கட்டுப்படுத்துவது கடினம். அதனால், பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது. குறிப்பாக இந்தமாதிரியான ஆடுகளத்தில் நாங்கள் பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும். நாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்த பிட்ச்சில் மாறுபட்ட பௌன்சர்கள் இருந்தன. என்ன இருந்தாலும் தொழில்முறை வீரர்களாக நாங்கள் தோல்விக்கு இந்தமாதிரி காரணங்களைக் கூறக்கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியிருக்க வேண்டும். சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல எனக் கூறியுள்ளார். எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியுடன் பஞ்சாப் அணி ஜூன் 1ஆம் தேதி மோதவிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து