முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      தமிழகம்
Sekarbabu-2023 04 06

சென்னை, மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; "தி.மு.க. ஆட்சியில் 175 கோடி அளவிற்கு 134 புதிய தேர்கள் 130 கோவில்களில் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 75 தேர்த்களை புதுப்பிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. 5 தங்கத்தேர் அறிவிக்கப்பட்ட நிலையில் பவானியம்மன் கோயிலில் தங்கத் தேர் பக்தர்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. 9 கோவில்களுக்கு வெள்ளித்தேர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காளிகாம்பாள், நெல்லையப்பர், திருத்தணி கோயில்களில் வெள்ளித் தேர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

தி.மு.க. ஆட்சியில் தற்போது வரை 3 ஆயிரம் குடமுழுக்குகள் நடைப்பெற்றுள்ளன.  இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். 4,000 கோயில்களின் பணிகளை நிறைவு செய்யும் நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.

திருச்செந்தூர் கோவிலில் ரூ.400 கோடிக்கான திருப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த மாதத்திற்குள் முடிக்கக் கூடிய திருப்பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குடமுழுக்கு நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பல்வேறு திட்டமிடல்கள் நடைப்பெற்றுள்ளன. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேர விவகாரத்தில் நீதி அரசுப் பக்கம் தான் உள்ளது.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு, சங்கிகள் நடத்த உள்ள மாநாடு, அரசியல் மாநாடு. அதற்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசியல் தேவைக்காக மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்த நடத்த கூடிய மாநாடு " என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து