எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.
மத்திய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதே வேளையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டை பல பத்தாண்டுகளாக காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ பாராளுமன்றத்தில் கூடுதல் இடங்களை பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையை குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.
இந்த சதித்திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், பா.ஜ.க. எப்படி இந்த கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது. 1971-ம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்கு சாதகமான முறையில் பாராளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.
தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் பாராளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே.
பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் லட்சணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காக தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாடுபோராடும். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் பாராளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே. - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
பக்ரீத் பண்டிகை: தமிழக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக இ.பி.எஸ்.
-
இன்று பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸடாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2025.
06 Jun 2025 -
மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
06 Jun 2025சென்னை, மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
-
நீதிபதி உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
06 Jun 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ள
-
அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே திடீரென மோதல்: நன்றியுணர்வு அற்றவர் என காட்டம்
06 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் எலான் மஸ்கிற்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது.
-
குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
06 Jun 2025சென்னை, ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
06 Jun 2025சென்னை : 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ள முத
-
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
06 Jun 2025சென்னை : போரூர்- பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
-
பணமோசடி வழக்கில் கைதான அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
06 Jun 2025சென்னை, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அ.தி.மு.க. ஐ.டி.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்
06 Jun 2025சென்னை : மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக தனது குரலை அ.தி.மு.க. பதிவு செய்திருக்கிறதா..? இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
06 Jun 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அ.தி.மு.க. பதிவு செய்திருக்கிறதா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்புகள்
06 Jun 2025காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
-
மாநிலங்களவைத் தேர்தல்: இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
06 Jun 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
எரியும் பாராசூட்டிலிருந்து குதித்து டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனை
06 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : மிஷன்: இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
-
ஓய்வு பெற்ற நீதிபதி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
06 Jun 2025சென்னை : ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்க டசால்ட்டுடன் டாடா ஒப்பந்தம்
06 Jun 2025புதுடெல்லி : ரபேல் விமானத்தின் கூண்டு பகுதியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக டசால்ட்டுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
ஓய்வு அறிவிப்பு எனது தந்தையை சோகத்தில் ஆழ்த்தியது: ரோகித் சர்மா
06 Jun 2025மும்பை : தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு தனது தந்தைக்கு ஏமாற்றமடைந்தது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
-
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
06 Jun 2025திருச்சி : தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு
06 Jun 2025ஹராரே : ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
அமெரிக்காவில் ரயிலில் அடிப்பட்டு பெண் பலி
06 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவில் நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரயில் அடிப்பட்டு உயிரிழந்தார்.
-
பெங்களூரு சம்பவம்: கர்நாடக முதல்வரின் செயலாளர் டிஸ்மிஸ்
06 Jun 2025பெங்களூரு : கர்நாடகாவில் நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலால் காஷ்மீரின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது: பிரதமர் நரேந்திரமோடி உறுதி
06 Jun 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
-
மே மாத சிறந்த வீரர் மெஸ்ஸி
06 Jun 2025ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) இன்டர் மியாமி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.
-
என்.சி.பி. அணிகள் இணைப்பா? - சுப்ரியா சுலே எம்.பி. விளக்கம்
06 Jun 2025மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) இரண்டு அணிகளும் இணைவது குறித்து எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை என்று என்.சி.பி. (சரத் பவார்) எம்.பி.