முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      இந்தியா
Nakselit

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர்கள் சுதாகர், பாஸ்கர் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டு வீ்ழ்த்தப்பட்டனர்.

பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடைபெற்ற நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திப்பட்டனர். அவர்களின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சண்டைக்குப்பிறகு 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. நேற்று காலை இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படை, மாவட்ட ரிசர்வ் கார்டு, மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்புக் குழுவான கோப்ரா ஆகியவை இணைந்து கடந்த 4ஆம் தேதி ரகசிய தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று பாஸ்கர் சுட்டு வீழ்த்தப்பட்டார். நேற்று முன்தினம் சுதாகர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இவர்களது தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட மற்ற 5 பேர்களில் இருவர் பெண்கள் ஆவார்கள். இந்த சண்டையின்போது பாம்பு, தேனீக்கள் காரணமாக சில வீரர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து