முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி பட்டறையில் திடீர் தீ விபத்து: அணைக்க நேரில் களமிறங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      தமிழகம்
Lorry-workshop-fire-2025-06

நாமக்கல், நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்புப்பணிகளில் நேரடியாக களமிறங்கி உதவினார்.

நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் முத்து என்பவர் பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பழைய லாரி கார்களில் உள்ள இரும்புகளை சேகரித்து அதனைத் தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பழைய லாரிகளின் உதிரி பாகங்கள் திடீரென எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அந்த வழியாக சனிக்கிழமை காலை எட்டு மணியளவில் பரமத்தி வேலூருக்கு காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தப் பழைய இரும்பு கடையின் முன்பு இருந்த பழைய வாகனத்தின் உதிரி பாகங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினரிடம் தீ எவ்வாறு பற்றியது என்று கேட்டறிந்தார். மேலும் நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படக்கூடாது என்பதால் தீயை உடனடியாக அணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பழைய வாகனங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து