முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது: ட்ரம்ப் அதிரடி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      உலகம்
Tramp 2025-06-08

Source: provided

வாஷிங்டன் : எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். நான் மற்ற பணிகளை செய்வதில் மிகவும் பிஸியாக உள்ளேன்.

அதிபர் தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை அதிபராக ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை.

2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், “மஸ்க் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். நிச்சயம் அவர் அரசுடன் இணைந்து பயணிப்பார் என கருதுகிறேன். ஆனால், இப்போது அது நடக்காது. அதிபர் ட்ரம்ப் சிறப்பாக தனது பணிகளை செய்து வருகிறார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் அதிபர் எந்த தவறையும் செய்யவில்லை. அதிபர் அண்மையில் அறிமுகம் செய்த மசோதா சிறந்த ஒன்று” என கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து