முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி: இந்திய விண்வெளி வீரர் நெகிழ்ச்சி

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Subhanshu-Shukla 2025-06-08

Source: provided

புதுடில்லி : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று (ஜூன் 10) பயணம் செய்ய உள்ள நிலையில், ''நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக இன்று (ஜூன் 10) இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, வரும் 11ம் தேதி இரவு 10:00 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று, நாசா அறிவித்துள்ளது. சுபன்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது முதல் பயணத்திற்கான இறுதிக் கட்டத்தில் தயாராகி வருகிறார். நேற்று  (ஜூன் 09) சுபன்ஷூ சுக்லா குழுவினர் ஒத்திகை நடத்தினர்.

41 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். இதற்கு முன், 1984ல் ரஷ்யாவின் சோயுஸ் திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு பயணம் செய்தார்.

இது குறித்து இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா கூறியதாவது: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வது மிகவும் அற்புதமான பயணம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து