முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதி: மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      தமிழகம்      அரசியல்
DMK-Offces 2023 03 31

 சென்னை, 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மா.கம்யூ., மாநிலச் செயலாளர் சண்முகம் அளித்த பேட்டி: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடைசியாக உடன்பாட்டில் கையெழுத்திட்டது மார்க்சிஸ்ட் கட்சி தான். 6 தொகுதிகள் என்பது மிகவும் குறைவு. இவ்வளவு குறைவான தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி இதுவரை போட்டியிட்டது கிடையாது.

ஆகவே கட்சி உறுப்பினர்கள் மத்தியில், மிகப்பெரிய அதிருப்தி இருந்தது. அத்தகைய நிலையில் தான் கூடுதலான தொகுதிகளை பெற வேண்டும் என்று கடுமையான முயற்சியில் ஈடுபட்டோம். கடைசியாக அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என்கிற கண்ணோட்டத்தில் தான் அது குறைவான தொகுதியாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு இந்த கூட்டணியில் பயணிக்கலாம் என்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வந்தது. ஆகவே அதேபோல் ஒரு நிலையை 2026ம் ஆண்டிலும் மேற்கொள்ள முடியாது.

 ஆகவே 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். தமிழக சட்டசபையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர வேண்டும் என்பது எங்கள் கட்சியின் முடிவு. அந்த முடிவை தான் நாங்கள் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். தி.மு.க., தலைமையிடம் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் கூடுதலான தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து முயற்சியையும் மேற்கொள்வோம். தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்.2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நாங்கள் போட்டியிட்டது திருப்திகரமாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து