முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் இருதரப்பினர் மோதல் 40 பேர் கைது

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
Jail

Source: provided

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் இருதரப்பினர் இடையே மோதல் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்குவங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸில் ஒரு கடை கட்டுமான தகராறில் ஒரு சிவன் கோவிலை சேதப்படுத்தி உள்ளனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. கற்கள் வீசப்பட்டன, வாகனங்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் கோல்கட்டாவிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த வன்முறையில் ஒரு பெண் கான்ஸ்டபிள் உட்பட பல போலீசார் காயமடைந்தனர். வன்முறையைக் கண்டித்து, கோல்கட்டா மேயரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிர்ஹாத் ஹக்கீம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: ஒரு முக்கியமான பிரச்னையை வகுப்புவாதமாகவும், அரசியலாகவும் மாற்ற பா.ஜ., முயற்சிப்பதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மேற்குவங்க மாநிலத்தில் நிலவும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து