முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் பயங்கரம்: ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      உலகம்
Minnal 2023 06 26

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. மேற்கு நகரமான சல்போல்க்கில் 30 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் அளவு ஆகும். இந்த நிலையில் தலைநகர் லண்டன், சபோல்க் ஆகிய நகரங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

அதேசமயம் மழை பெய்தபோது ஒரே இரவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை மின்னல் தாக்கியதாக பதிவானது. அவற்றில் பல மின்னல்கள் கடல் பகுதியில் பதிவாகின.எனவே இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து அயர்லாந்து, ஸ்காட்லாந்திலும் கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மின்னல் தாக்கியதில் அங்கு காட்டுத்தீயும் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களது சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோல் மின்னல் காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் நிலவியது. எனவே லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து