முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடேன வெளியேற இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      உலகம்
Nedanyagu 2024-12-10

Source: provided

டெஹ்ரான் : ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர். ஈரானில் அணு ஆயுத மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன.

இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈரானும் கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானில் ராணுவ தொழிற்சாலைகள் அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறியதாவது; அனைத்து ஈரான் குடிமக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை திரும்பி வரக்கூடாது. இந்த பகுதியில் வசித்து வருவது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து