முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      இந்தியா
Nakselit

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனவரி மாதம் முதல் இதுவரை 213 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 20) கான்கர் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து, வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இது குறித்து, கான்கர் மாவட்ட எஸ்.பி., கல்யாண் எலெசேலா கூறியதாவது: பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்திய இடத்திலிருந்து, பெண் நக்சலைட் உடல் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஜனவரி முதல் இதுவரை நக்சலைட்டுகள் 213 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து